தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.15 கோடி காணிக்கை + "||" + Rs 15 crores tribute to Ezumalayan temple

ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.15 கோடி காணிக்கை

ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.15 கோடி காணிக்கை
ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.15 கோடி காணிக்கை வழங்கப்பட்டுள்ளது.
திருமலை,

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2 பேர் சேர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இரு அறக்கட்டளைக்கு மொத்தம் ரூ.14 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளனர். இருவரும் தங்களை பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை.


அந்த பக்தர்கள், காணிக்கை தொகையை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வங்கி வரைவோலையாக தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினார்கள். அந்த பக்தர்களுக்கு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

அதேபோல் ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தரான யோகமிடி ராமிரெட்டி என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்தை வங்கி வரைவோலையாக வழங்கினார்.