அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு


அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு
x
தினத்தந்தி 10 Aug 2019 3:32 AM GMT (Updated: 10 Aug 2019 3:32 AM GMT)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண்ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், அஷ்வினி சவுபே ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர். 

இந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.  அருண் ஜெட்லி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அருண் ஜெட்லியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் வெங்கையாநாயுடுவிடம் தெரிவித்தனர். 


Next Story