குஜராத்தில் கனமழை: வீடு மற்றும் சுவர் இடிந்து 8 பேர் பலி


குஜராத்தில் கனமழை: வீடு மற்றும் சுவர் இடிந்து 8 பேர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2019 3:05 AM IST (Updated: 11 Aug 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் கனமழை காரணமாக, வீடு மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதில் ஆமதாபாத் நகரில் போபால் என்ற பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குடும்பத்தினர் அந்த கட்டிடத்தின் சுவர் அருகே படுத்து தூங்கினர். அப்போது அந்த சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் தினேஷ் (வயது 37), அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடல் நசுங்கி பலியானார்கள். அதேபோல கேதா மாவட்டம் நாடியாட் நகரில் ஒரு 3 மாடி பழைய கட்டிடம் மழையால் இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story