தேசிய செய்திகள்

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு + "||" + Delhi Police books former BJP MLA Manoj Shokeen for raping daughter in law

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
டெல்லியில் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நாங்கோலி சட்டசபை தொகுதியிலிருந்து பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் சோகீன் மீது அவருடைய மருமகள் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். அவருடைய புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின்னர் என்னை மனோஜ் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தார். வெளியே கூறினால் என்னுடைய சகோதரனை கொலை செய்வதாக மிரட்டினார். 

என்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையால் வெளியே சொல்லவில்லை. இப்போது என்னுடைய மாமியாரும் பல்வேறு துன்பங்களை கொடுத்துள்ளார். அவருக்கு எதிரான வழக்கு பெண்கள் ஆணையத்தில் நடக்கிறது. அப்போதுதான் எனக்கு நடந்தவையை வெளியே கூறினேன். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காவல் நிலையம் வந்துள்ளேன் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.