3 நாள் அரசு முறை பயணம் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீனா சென்றார்
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீனாவில் 3 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
நாளை திங்கட்கிழமை முதல் அவர் 3 நாட்களுக்கு சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது இருநாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா–சீனா இடையே உரசல் நீடிக்கும் நிலையில் ஜெய்சங்கரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. லடாக் யூனியன் பிரதேமாக அறிவித்ததை ஏற்கமுடியாது என சீனா கூறியிருந்தது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி சீனாவுக்கு பயணம் செய்து காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story