சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்


சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:44 PM IST (Updated: 12 Aug 2019 11:44 PM IST)
t-max-icont-min-icon

பட்டியல் இன மாணவர்களின் சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் உயர்த்தி உள்ளது. இதில் பட்டியல் இன (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்கான கட்டணம் 24 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா அரசு, பழங்குடியின மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தண்டித்து வருகிறது. பா.ஜனதாவின் சமூக அநீதி மற்றும் அரசியல் விரோதப்போக்குக்கு தலித் பிரிவினர் இரையாகி வருகின்றனர். தலித் மாணவர்களின் எதிர்காலத்தை மீண்டும் ஒருமுறை பா.ஜனதா அரசு சீரழித்து இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் கட்சி, இல்லையென்றால் தலித்துகளுக்கான அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை பா.ஜனதா அரசு மீண்டும் ஒருமுறை அழிப்பதை நிரூபிக்கும் வகையில் அமையும் என்று கூறியுள்ளது.

Next Story