“நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா?” - ராகுல் காந்திக்கு காஷ்மீர் கவர்னர் சவால்
காஷ்மீரில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறும் ராகுல் காந்தி, காஷ்மீருக்கு நேரில் வந்து பார்த்து விட்டு கருத்து சொல்லத் தயாரா? என்று அந்தமாநில கவர்னர் சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. அங்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், நிலைமை மோசமாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் நேற்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் இதே கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ஒரு தனியார் செய்தி சேனல், காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் கருத்து கேட்டது. அதற்கு சத்யபால் மாலிக் கூறியதாவது:-
ராகுல்காந்தி, ஒரு பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து முதிர்ச்சியான கருத்தை எதிர்பார்க்கிறேன். அவர் நாடாளுமன்ற விவாதத்தில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், அவரது கட்சி சார்பில் வேறொருவர் (ஆதிர் ரஞ்சன் சவுத்ரி) பேசினார். அவருக்கு காஷ்மீர் பிரச்சினை எப்படி, ஐ.நா.வுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றே தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் பேசாத ராகுல் காந்தி, கட்சி கூட்டத்தில் இருந்து வெளியே வந்தபோது நிருபர்களிடம் பேசுகையில், “காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
எங்களிடம் அரசு விமானம் உள்ளது. அதை அனுப்பி வைக்கிறோம். ராகுல் காந்தி, அதில் ஏறி காஷ்மீருக்கு வரட்டும். இங்குள்ள நிலைமையை நேரில் பார்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும். அதன்பிறகு அவர் பேசட்டும். இதற்கு அவர் தயாரா?
காஷ்மீரில் இன்று வரை ஒருவர் கூட காயம் அடையவில்லை.
காஷ்மீரில் 20 ஊடகங்கள் தங்கி இருந்து செய்தி சேகரித்து வெளியிடுகின்றன. ஆனால், ஒரு மேலை நாட்டு ஊடகம் சொல்வதை மட்டும் நம்பி பேசுவது சரியாக இருக்காது. இவ்வாறு கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.

Related Tags :
Next Story