சினிமா ஸ்டைலில் ஒரு நிஜ காட்சி... துப்பாக்கி சூட்டில் நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்த போலீஸ் அண்ணன்
துப்பாக்கி சூட்டின் போது நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்துள்ளார் போலீஸ் அண்ணன்.
சுக்மா:
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியைச் சேர்ந்தவர் வெட்டி ராமா. இவர் போலீசாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அப்போது ராமாவுக்கு எதிராக நின்ற மாவோயிஸ்டுகளுள், ஒரு மாவோயிஸ்டாக அவரது தங்கை வெட்டி கன்னியும் நின்றுள்ளார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் வெட்டி கன்னி எப்படியோ தப்பித்துவிட்டார். வெட்டி ராமா 2008-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். இது குறித்து வெட்டி ராமா கூறுகையில்,
‘நாங்கள் இருவருமே மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்தான். ஆனால், மனமாற்றத்தால் சில காலம் கழித்து நான் ஆயுதத்துடன் சரண் அடைந்து போலீசாக மாறிவிட்டேன்.
என் தங்கை கன்னியை நான் பலமுறை திரும்ப வந்துவிடுமாறு கடிதம் எழுதி அனுப்பினேன். ஆனால், இன்னும் வந்தபாடில்லை. தொடர்ந்து மாவோயிஸ்டாக தன் வாழ்க்கையை போராட்டமாகவே நடத்திக் கொண்டிருக்கிறாள்.
என் எதிரில் நின்று ஒரு மாவோயிஸ்டாக செயல்பட்டபோது எனக்கு கடினமாகவே இருந்தது. இது மிகுந்த மனவேதனையாக உள்ளது’ என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story