தேசிய செய்திகள்

“ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்” -சுப்ரீம் கோர்ட்டு + "||" + Govt should be given reasonable time to ensure normalcy in JK Supreme Court

“ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்” -சுப்ரீம் கோர்ட்டு

“ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்” -சுப்ரீம் கோர்ட்டு
ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் மெகபூபா  முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்  மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக்கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

தனது மனுவில், “ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் சூழலை ஆராய குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என்று கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

மாநிலத்தில் கட்டுப்பாடுகளை நீக்க உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
 
மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையில் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் சில நாட்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்பு மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிர்வாக கட்டுப்பாடுகளில் தலையிட மறுத்துவிட்டது, மாநிலத்தில் இயல்புநிலையை திரும்ப கொண்டுவர அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்: தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு
காஷ்மீர் விவகாரத்தில் தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
3. தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
ஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
4. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி
காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.
5. ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை - தலைமை செயலாளர்
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் கூறினார்.