கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை


கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:13 AM GMT (Updated: 13 Aug 2019 12:29 PM GMT)

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மீண்டும் இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளது. 70-க்கும் அதிகமானோர் விபத்து சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மலப்புரம் மற்றும் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியும் தொடர்கிறது.  இந்நிலையில் மீண்டும் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருநாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுபகுதி காரணமாக கேரளாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும். கோழிக்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இம்மாவட்டங்களில் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.  கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story