தேசிய செய்திகள்

எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத் + "||" + Army chief Bipin Rawat says prepared for any challenge as Pak ramps up troops along LoC

எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்

எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்
எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை எடுக்கும் பாகிஸ்தானின் ராணுவப் படைகள் எல்லையில் குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் பாதுகாப்பு படையினரை குவிப்பது தொடர்பாக கவலைப்பட வேண்டியது எதுவும் கிடையாது, எந்தஒரு பாதுகாப்பு சவாலையையும் எதிர்க்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அதிகமான படைகளை குவிக்கிறது என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம், இது இயல்பானது. இதுதொடர்பாக கவலையடைய எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார் பிபின் ராவத்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையை ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்தார் ராணுவ தளபதி பிபின் ராவத்
ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி பிபின் ராவத் எடுத்துரைத்துள்ளார்.
2. வெள்ளைக் கொடியுடன் வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவத்தின் அறிவுரைக்கு பாகிஸ்தான் பதில்
எல்லையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளின் உடல்களை வெள்ளைக்கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று இந்திய ராணுவம் வழங்கிய அறிவுரைக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.
3. இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி -இந்திய ராணுவம்
இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது என்று இந்திய ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.
4. உங்கள் மகன்கள் பயங்கரவாதியாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்... காஷ்மீர் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை
உங்கள் மகன்கள் பயங்கரவாதிகளாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரில் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது.
5. இந்திய ராணுவத்தின் யுத்த மீறல்கள் அதிகரித்து உள்ளன; இது அவர்களின் விரக்தியை காட்டுகிறது - பாகிஸ்தான்
இந்திய ராணுவத்தின் யுத்த மீறல்கள் அதிகரித்து உள்ளன. இது அவர்களின் விரக்தியை காட்டுகிறது என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.