எஸ்.சி. மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு


எஸ்.சி. மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 1:27 AM IST (Updated: 14 Aug 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.சி. மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கட்டணத்தை எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.1,200 ஆகவும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,500 ஆகவும் உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ., மனிதவள மேம்பாட்டு மந்திரி அறிவுறுத்தலின் பேரில் டெல்லி அரசு பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் முன்பு செலுத்தியது போலவே ரூ.50 மட்டும் செலுத்தலாம், எஞ்சிய கட்டணத்தை டெல்லி அரசு செலுத்தும் என்று அறிவித்துள்ளது. அதேசமயம் மற்ற மாநிலங்களுக்கு சி.பி.எஸ்.இ. எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

Next Story