தேசிய செய்திகள்

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான்-2 + "||" + Chandrayaan-2 successfully enters Lunar Transfer Trajectory

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான்-2

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான்-2
புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 2 தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டா,

சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22 ம் தேதி ட சந்திராயன் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 

3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன.இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில்,  புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 2 தொடங்கியது.   வரும் 20-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் சந்திரயான்-2 நுழையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நிலாவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 நுழைந்ததையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. 5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2
சந்திரயான்-2 விண்கலம் 5-வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று ; திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் -சிவன்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று; திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
4. ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு
ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
5. சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன? புதிய தகவல்கள்
சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன என தகவல்கள் வெளியாகியுள்ளன.