வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம், வயநாட்டில் அமைக்க வேண்டும் -ராகுல் காந்தி


வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம், வயநாட்டில் அமைக்க வேண்டும் -ராகுல் காந்தி
x
தினத்தந்தி 14 Aug 2019 5:38 AM GMT (Updated: 14 Aug 2019 5:38 AM GMT)

வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை வயநாட்டில் அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வயநாடு  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி வயநாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில்,  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல் காந்தி, வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம் வயநாட்டில் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

வயநாடு மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், சுற்றுசூழலை பாதுகாக்க  சிறப்பு தொகுப்புடன் கூடிய செயல் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் வயநாட்டில் செயல்படுத்த வேண்டும். பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில், அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும்  கருவிகளை அமைத்து இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story