ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: காவல்துறை அதிகாரி தகவல்


ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு: காவல்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2019 12:35 PM IST (Updated: 14 Aug 2019 12:35 PM IST)
t-max-icont-min-icon

ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் நீடிக்கும் கட்டுப்பாடுகளால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் முழுமையாக  தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரியான முனிர் கான்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story