வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகங்கள் நீக்கம்


வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகங்கள் நீக்கம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 AM GMT (Updated: 14 Aug 2019 11:35 AM GMT)

ஆமதாபாத்தில் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றிலிருந்து 452 உலோகப்பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது, மருத்துவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வயிற்று வலிக்காக 28 வயது வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் இரும்பு பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்தனர். அப்போது அவருடைய வயிற்றில் இருந்து இரும்பு பூட்டு, பின்கள், நகவெட்டி, நாணயம் உள்பட பல்வேறு உலோகங்கள் இருந்துள்ளது. சுமார் 4.5 கிலோ எடை கொண்ட 452 இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளனர்.

கடந்த 8 மாதமாக உணவு என்று உலோகப்பொருட்களை சாப்பிட்டுள்ளார் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story