காஷ்மீர் : இந்தியா பதிலடி 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறலுக்கு இந்தியா தந்த பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு,
நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில், பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story