பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன்


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன்
x
தினத்தந்தி 16 Aug 2019 7:15 AM GMT (Updated: 16 Aug 2019 7:15 AM GMT)

போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், தனது ட்விட்டர் பதிவில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேரும், இந்திய வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த், பாகிஸ்தானின் தகவல் அடிப்படையற்றது மற்றும் கற்பனையானது என தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழல் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கில், இந்திய ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் துப்பாக்கிச்சூடு போன்ற செயல்பாடுகளை அதிகரித்திருப்பதாக, மற்றுமொரு பதிவிலும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அதிகளவில் பணியிலமர்த்தப்பட்டனர். இந்திய ராணுவமும் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

Next Story