தேசிய செய்திகள்

வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளா + "||" + kerala rains imd alert rehabilitation relief

வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளா

வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளா
வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  கேரளாவின், 14 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கண்ணுார், காசர்கோடு, இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், மழை நின்றது.  மழை பெய்யாததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாம்களில் தங்கியிருந்த ஏராளமானோர் வீடுகளுக்கு திரும்பினர்.

மலப்புரம் மாவட்டத்தின், கவலபாரா மற்றும் வயநாட்டின் புதுமலா பகுதிகளில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.  நடப்பு பருவமழைக்காலத்தில், மழை மற்றும் நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109  ஆக அதிகரித்துள்ளது.  

மழை விட்டதோடு, வெயிலும் தலை காட்ட துவங்கியுள்ளதால், வெள்ள நீர் வேகமாக வடிந்து வருகிறது. அடுத்த ஒருவாரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.