காஷ்மீர்: பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆக.19-முதல் திறக்கப்படும் என தகவல்


காஷ்மீர்: பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆக.19-முதல் திறக்கப்படும் என தகவல்
x
தினத்தந்தி 16 Aug 2019 8:19 AM GMT (Updated: 16 Aug 2019 8:19 AM GMT)

காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆக.19-முதல் திறக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

 ஜம்மு உள்ளிட்ட இடங்களில்,  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், காஷ்மீரில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பள்ளிகள்,  அரசு அலுவலகங்கள் வரும் திங்கள் கிழமை (ஆக.19) முதல் செயல்பட துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் நிர்வாகம் நிலமையை ஆய்வு செய்த பிறகு அதன் அடிப்படையில் திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, காஷ்மீரில் இன்னும் சில தினங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. 

Next Story