தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம் + "||" + Unnao rape-accused MLA Sengar gets prime spot in Independence Day ad, beside Modi and Adityanath

சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்

சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம்
சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. புகைப்படம் வெளியானது சர்ச்சையாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளார். அவரை பா.ஜனதா கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் இருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகையில் நேற்று சுதந்திர தினத்தன்று வெளியான விளம்பரத்தில் குல்தீப் சிங் செங்கார் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.  

விளம்பரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரின் புகைப்படமும் இடம் பெற்று உள்ளது. விளம்பரத்தை உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் அனுஜ் குமார் திக்‌ஷித் கொடுத்துள்ளார்.  குல்தீப் சிங் செங்கார் எங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ. அதனால் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளார் எனக் கூறியுள்ளார். 

குல்தீப் சிங் செங்கார் விவகாரத்தில் கட்சி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்து விட்டது. குல்தீப் சிங் செங்காரிடம் எங்களுக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலை கலரை மாற்றியது ஒரு தப்பா? வைரலான பெண் தேர்தல் அதிகாரி
பெண் தேர்தல் அதிகாரி பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
2. குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசினார் மோடி
குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.
3. மோடி தொகுதி பள்ளிக்கூடத்திற்கு மின் கட்டணம் ரூ.618.5 கோடி அதிர்ச்சியில் நிர்வாகம்
உத்தரபிரதேச பள்ளிக்கு இரண்டு மாத மின் கட்டணமாக 618.5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
4. மாயாவதி மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்துவிடுவர் உபி மந்திரி சர்ச்சை பேச்சு
மாயாவதி ஒரு மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்து விடுவார்கள் என உத்தரபிரதேச மந்திரி ஒருவர் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
5. உன்னோவ் பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை
உன்னோவ் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.