தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை + "||" + Teacher suicide on Independence Day: 15 years of unpaid work

சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை

சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை
15 வருடங்களாக சம்பளம் கிடைக்காத வேதனையில், ஆசிரியர் ஒருவர் சுதந்திர தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார்.
நாக்பூர்,

மராட்டிய மாநிலம் கோன்டியா மாவட்டத்தில் இயங்கிவரும் ஆதிவாசி ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் கேசவ் கோபடே. இவருக்கு 15 வருடங்களாக அரசு சம்பளமோ, உதவியோ வழங்கவில்லை. ஆனாலும் சம்பளம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார். பொருளாதார நெருக்கடியால் அவரது மனைவி 6 வருடங்கள் முன்பே மகனுடன் பிரிந்து சென்றுவிட்டார்.


விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும், அதன்பின்னர் அரசு மானியமோ, சம்பளமோ கிடைக்காது என்று கருதிய அவர் சுதந்திர தினத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் சம்பளம் பெறாமல் வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களிடம் அரசுக்கு எதிராக கோபத்தை தூண்டியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து, முதல்-அமைச்சர் பங்கேற்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் கிரண்பெடி, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
2. ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அரசு துடைக்கும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
3. நாட்டின் 73-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
4. சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
5. சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவர்னர் சத்யபால் மாலிக்
சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.