தேசிய செய்திகள்

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் இணையதளசேவை மீண்டும் வழங்கப்பட்டது + "||" + 2G mobile internet services restored in JAMMU, REASI, SAMBA, KATHUA, & UDHAMPUR.

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் இணையதளசேவை மீண்டும் வழங்கப்பட்டது

ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் இணையதளசேவை  மீண்டும் வழங்கப்பட்டது
ஜம்முவில் மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்தது.  காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் வேகமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய இடங்களில் 2-ஜி மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. நிலமையை ஆய்வு செய்த பின், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.