தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல் + "||" + Arun Jaitley's health remains critical, ex-finance minister put on life support, say reports

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்
முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, 

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல்  காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் உடல் நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும்  அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐசியூவில், மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.