தேசிய செய்திகள்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திரயான்-2 + "||" + Chandrayan-2 lands at the Moon's South Pole

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது சந்திரயான்-2

நிலவின் தென் துருவத்தில்  தரையிறங்குகிறது சந்திரயான்-2
சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 14) பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது. 

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவைச் சென்றடையும். பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வரும். அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரயான்-2 திட்டம் 98 % வெற்றி : இஸ்ரோ தலைவர் சிவன்
சந்திரயான்-2 திட்டம் 98 % வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
2. விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தகவல்
விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
3. விக்ரம் லேண்டருக்கு ஹலோ... சிக்னல்களை அனுப்பி லேண்டரை தொடர்பு கொள்ள நாசா முயற்சி
விக்ரம் லேண்டருக்கு ஹலோ... சிக்னல்களை அனுப்பி லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
4. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன : இஸ்ரோ
விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
5. தொட்டுவிடும் தூரம் தொலைவில் இல்லை
இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கதறி அழுததும் பிரதமர் அவரை அணைத்து ஆறுதல் கூறியதையும் நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது கூறும் செய்தி பெரியது.