தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் - 13 பேர் பதவி ஏற்க வாய்ப்பு + "||" + Karnataka cabinet expansion on August 20 - 13 people likely to take office

கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் - 13 பேர் பதவி ஏற்க வாய்ப்பு

கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் - 13 பேர் பதவி ஏற்க வாய்ப்பு
கர்நாடக மந்திரிசபை 20-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பெங்களூரு,

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா கடந்த மாதம் ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதற்கட்டமாக வருகிற 20-ந்தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் 13 பேர் மந்திரி பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.