தேசிய செய்திகள்

இந்தியா அவசர நிதிநிலை தேவையை சந்தித்து கொண்டிருக்கிறது : அபிஷேக் சிங்வி + "||" + India is facing urgent financial need: Abhishek Singhvi

இந்தியா அவசர நிதிநிலை தேவையை சந்தித்து கொண்டிருக்கிறது : அபிஷேக் சிங்வி

இந்தியா அவசர நிதிநிலை தேவையை சந்தித்து கொண்டிருக்கிறது : அபிஷேக் சிங்வி
இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலையையும், அவசர நிதிநிலை தேவையையும் எதிர்க்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

நாட்டின் பொருளாதார மந்தநிலையையும், அவசர நிதிநிலை தேவையையும் குறித்த கவலையை வெளிப்படுத்திய சிங்வி, பாஜக அதன் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :-

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி திடீரென்று ஏற்படவில்லை. விற்பனையில் ஏற்ப்பட்ட 31 சதவீதம் வீழ்ச்சி என்பது மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையில் ஒன்பதாவது தொடர்ச்சியான வீழ்ச்சியாகும். ஜூலை 2018 முதல் 13 மாதங்களில் 12 முறை  விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. 

இது உலகின் 4-ஆவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையான இந்தியாவின் கடுமையான மந்தநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மோடியின் முதலாவது அரசு தொடக்கத்திற்கும், மோடியின் இரண்டாவது அரசுக்கும் உள்ள வித்தியாசத்தையை ஆராய்ந்து பார்த்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவை எளிதாக காண இயலும் என்று சிங்வி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களில் வீழ்ச்சி, தொழிலாளர் சக்தி குறைதல், ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை, ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நிதிமேலாண்மை முதலீடு ஆகியவை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.