தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி + "||" + 11 killed as container truck collides with state bus in Maharashtra's Dhule

மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி

மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி
மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நிம்குல் கிராமம் அருகே ஷஹடா-தொண்டைச்சா சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அவுரங்காபாத் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

எதிர்திசையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.  திடீரென பேருந்தின் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் இரு வாகன ஓட்டுநர்கள் உள்பட 11 பேர் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர்.  காயமடைந்தோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.