தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு தங்க செங்கல் நன்கொடை வழங்க முகலாய பேரரசரின் வழித்தோன்றல் முடிவு + "||" + Man who claims to be Mughal descendant offers gold brick for Ram temple

ராமர் கோவிலுக்கு தங்க செங்கல் நன்கொடை வழங்க முகலாய பேரரசரின் வழித்தோன்றல் முடிவு

ராமர் கோவிலுக்கு தங்க செங்கல் நன்கொடை வழங்க முகலாய பேரரசரின் வழித்தோன்றல் முடிவு
ராமர் கோவிலுக்கு தங்க செங்கல் நன்கொடையாக வழங்க முகலாய பேரரசர்களின் கடைசி வழித்தோன்றல் முன்வந்துள்ளார்.
இந்தியாவில் பேரரசர் பாபர் ஆட்சிக்கு பின் முகலாய சாம்ராஜ்யம் வளர்ச்சி அடைந்தது.  அதன் கடைசி பேரரசராக இருந்தவர் பகதூர் ஷா ஜாபர்.  அவரது வழித்தோன்றல் என இளவரசர் ஹபீபுதீன் டுசி (வயது 50) என்பவர் கூறி வருகிறார்.

இவர் அயோத்தியாவுக்கு 3 முறை சென்றுள்ளார்.  கடந்த வருடம் அங்கு சென்றபொழுது, ராமர் கோவிலுக்கு நிலம் வழங்குவேன் என உறுதி கூறினார்.  ராமர் கோவிலை அழித்ததற்காக, இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறிய அவர், சரண் பாதுகையை எடுத்து தனது தலையில் வைத்து மன்னிப்பு கோரினார்.

எனினும், சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி நிலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.  பாபரின் வம்சாவளியான தனக்கு நிலத்தின் சரியான உரிமையாளர் என்ற தகுதி உள்ளது.

இந்த நிலம் சுப்ரீம் கோர்ட்டால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டால், ராமர் கோவில் கட்டிடம் எழுப்புவதற்காக அனைத்து நிலமும் நன்கொடையாக வழங்குவேன்.  பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற அவர்களது நம்பிக்கை மற்றும் உணர்வுகளை மதிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு செய்துள்ளார்.  இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

அவர் கூறும்பொழுது, இந்த வழக்குடன் தொடர்புடைய ஒருவரிடமும் சான்று ஆவணங்கள் எதுவும் இல்லை.  ஆனால், முகலாய வழித்தோன்றலான தனக்கு நிலம் மீது உரிமை உள்ளது.  கோவில் கட்ட முழு நிலமும் வழங்குவது என நான் முன்பே முடிவு செய்து விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  ராமர் கோவில் கட்டுவதற்கு தங்க செங்கல் நன்கொடையாக வழங்க அவர் முன்வந்துள்ளார்.

கடந்த 1529ம் ஆண்டு பாபர் மசூதி கட்டப்பட்டது.  இந்த மசூதி நூற்றுக்கணக்கான கரசேவகர்களால் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.