தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை


தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை
x
தினத்தந்தி 19 Aug 2019 10:11 AM GMT (Updated: 19 Aug 2019 10:11 AM GMT)

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது.  இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் நேற்று சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கிடையே மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் குழப்பம் நிலவுவதாக தெரிகிறது. மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் தலைமை உளவுத்துறை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Next Story