தேசிய செய்திகள்

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் + "||" + Syed Geelani had internet, phone access during JK lockdown 2 BSNL officers suspended

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது. இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொலைத்தொடர்பு சேவையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு மட்டும் லேண்ட் லைன் தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவை கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 4-ம் தேதியே கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் கிலானி மட்டும் 8-ம் தேதி வரை டுவிட்டரில் செய்தியை டுவிட் செய்து வந்துள்ளார். இவ்விவகாரத்தில் குழப்பம் அடைந்த போலீசார் பிடியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். 

விசாரணை தொடங்கியதும் கிலானிக்கான இன்டர்நெட் சேவையை ரத்து செய்துவிட்டு அதிகாரிகள் அமைதியாக இருந்துள்ளனர். 

விசாரணையில் உண்மை தெரியவந்ததும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு
காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
2. ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்வு
ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்: லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
5. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.