காஷ்மீரில் நடுநிலைப் பள்ளிகள் நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் என அறிவிப்பு


காஷ்மீரில் நடுநிலைப் பள்ளிகள் நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 3:03 PM GMT (Updated: 19 Aug 2019 3:29 PM GMT)

அரசு தொடக்கப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளையும் புதன்கிழமை முதல் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு  அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அங்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதோடு கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இத்தகைய அதிரடி காரணமாக காஷ்மீரில் வன்முறை ஏற்படுவது ஒடுக்கப்பட்டது. கடந்த 2 வாரமாக காஷ்மீரில் திருப்தி அளிக்கும் வகையில் அமைதி நிலவுகிறது.  ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை  கொண்டு வரும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதன் முதல் படியாக காஷ்மீரில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளதாக்குகளில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் புதன்கிழமை முதல் மீண்டும்  திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Next Story