காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க. செய்தி தொடர்பாளர் மீது போலீசில் புகார்


காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சை பேச்சு: தி.மு.க. செய்தி தொடர்பாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 19 Aug 2019 9:40 PM GMT (Updated: 2019-08-20T03:10:08+05:30)

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தி.மு.க. செய்தி தொடர்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளர் ஜி.எஸ்.மணி, டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ‘காஷ்மீர் விவகாரம் தொடர்புடைய இதுபோன்ற வன்முறையான கருத்துகள் உலக அளவில் இந்தியாவின் அயல்நாட்டு உறவை பாதிக்கும். தேசத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கும். அதனால் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.


Next Story