தேசிய செய்திகள்

இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் + "||" + Defence Minister Rajnath Singh: Indian Air Force is a technologically advanced and extremely potent force,

இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி,

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப்படை  தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா ஆகியோர் இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில்  பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சிகள் குறித்த புத்தகங்களை வெளியிட்டனர். 

பின்னர் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

இந்திய விமானப்படை தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியது. இந்திய விமானப்படை  மிகவும் வலிமையாக உள்ளது. அண்மையில் நமது சுற்றுப்புறத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்  இந்திய ஆயுதப்படைகளின் வலிமையை உணர்த்தி இருக்கிறது.

தனியார் பாதுகாப்புத் துறைக்கு அரசு நிறுவனங்களின் சோதனை வசதிகளை வழங்கும் திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.  இந்த சட்டம்  தனியார் நிறுவனங்களால் சோதனை வசதிகளைப் பயன்படுத்துவதில் பல்வேறு தடைகளை நீக்கியுள்ளது என கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல்  ஜாவேத் பஜ்வாவுக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு கால நீட்டிப்பு குறித்து இந்திய விமானப்படைத் தலைவர்  மார்ஷல் பி.எஸ்.தனோவ கூறும் போது, அவர்களின் அமைப்பு என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2. இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது - ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
3. முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
4. விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார்- ராஜ்நாத் சிங்
விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
5. இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா பதவியேற்பு
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா இன்று பதவியேற்றுக்கொண்டார்.