இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்காள தேச பிரதிநிதியை சந்தித்தார்


இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்காள தேச பிரதிநிதியை சந்தித்தார்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:44 AM GMT (Updated: 20 Aug 2019 11:14 AM GMT)

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்காள தேச பிரதிநிதி ஏ.கே.அப்துல் மோமனை சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

டாக்கா,

இந்திய வெளியுறவு துறை மந்நிரி ஜெய்சங்கர், வங்காள தேச பிரதிநிதி ஏ.கே.அப்துல் மோமனை தலைநகர் டாக்காவில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்த பின்னர், தன்மண்டியில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அந்நாட்டு தேச தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும், வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை அவரது, உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜெய்சங்கர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள தேசத்தின் வளர்ச்சியில் பங்களிப்பதில் இந்தியா, முன்னணி நாடாக உள்ளது, மேலும், வங்காள தேசத்திற்கு சலுகை வரிகளை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நேபாள-இந்திய கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெய்சங்கர் புதன்கிழமை காலை டாக்காவிலிருந்து காட்மாண்டுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story