தேசிய செய்திகள்

360 கோடி டுவிட்டுகள்: மோடியின் சாகச வீடியோ டிரெண்டிங்கில் உலக சாதனை + "||" + 360 crore tweets is world record in Modi's adventure video trending

360 கோடி டுவிட்டுகள்: மோடியின் சாகச வீடியோ டிரெண்டிங்கில் உலக சாதனை

360 கோடி டுவிட்டுகள்: மோடியின் சாகச வீடியோ டிரெண்டிங்கில் உலக சாதனை
மோடியின் சாகச வீடியோ 360 கோடி டுவிட்டுகளை பதிவு செய்து டிரெண்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இதில் நிகழ்ச்சியை நடத்தும் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்றுத் தருகிறார். இதில் அவ்வப்போது பிரபலங்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.


பியர் கிரில்சும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரகாண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் சாகச காட்டுப்பயணம் மேற்கொண்ட சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பானது. ஆங்கிலம், இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த சாகச நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன. இவை ஒருபுறம் இருக்க, இது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சர்வதேச சாதனைகளை உடைத்துள்ளது.

இதுகுறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகில் அதிக டிரெண்ட் ஆன ஒரு டி.வி. நிகழ்வு இதுதான் என்றும், உலகம் முழுவதும் 360 கோடி முறை இந்த எபிசோடு குறித்த டுவிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த சாதனையை இதற்கு முன்பு 53-வது சூப்பர் பவுல் நிகழ்ச்சி வைத்திருந்தது. அமெரிக்க கால்பந்து போட்டி குறித்து 340 கோடி டுவிட்டுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.
2. ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார் - டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
பஹ்ரைன் பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார். அங்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
3. சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார் - அமித்ஷா
சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றி உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
4. பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு
பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டனர்.
5. காஷ்மீர் விவகாரத்தில் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் - இம்ரான் கான்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்திய பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.