தேசிய செய்திகள்

சிதம்பரத்தின் செயல்பாடு மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது: பாஜக காட்டம் + "||" + "Shame": BJP Hits Out At Congress Over P Chidambaram case

சிதம்பரத்தின் செயல்பாடு மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது: பாஜக காட்டம்

சிதம்பரத்தின் செயல்பாடு மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது: பாஜக காட்டம்
சிதம்பரத்தின் செயல்பாடு விஜய் மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம்  தரப்பினர் மேல் முறையீடு செய்தனர்.

மனுவை பட்டியலிடாமல் விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு நாளை மறுநாள்  (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத்தெரிகிறது.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார் எனவும், ப.சிதம்பரத்தின் செயல்பாடு விஜய் மல்லையா, நிரவ் மோடி போல் உள்ளது என்றும் பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் இவ்வாறு விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி
டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
2. காங்கிரசில் என்ன தான் நடக்கிறது...? ராகுல்காந்தி தலைவராவாரா...? மாட்டாரா...?
காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை காங்கிரசுக்குள் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
3. இஸ்லாமியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும் எங்களுக்கு இந்தியர்களே- பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் குடிமக்களை மதத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள். அனைவரையும் நாங்கள் இந்தியர்களாகவே பார்க்கிறோம் என பிரதமர் கூறினார்.
4. டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் ; கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
5. ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.