காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு படையினரை உடனடியாக திரும்பப்பெறும் திட்டம் இல்லை -மத்திய அமைச்சர்


காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு படையினரை உடனடியாக திரும்பப்பெறும் திட்டம் இல்லை -மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:04 PM GMT (Updated: 21 Aug 2019 4:04 PM GMT)

காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு படையினரை உடனடியாக திரும்பப்பெறும் திட்டம் இல்லை என்று மத்திய இணை மந்திரி ஜி கிஷான் ரெட்டி தெரிவித்தார்.

ஐதராபாத், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.  முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பியதால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் 144 தடையுத்தரவும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படத்துவங்கின.

இந்த நிலையில், மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷான் ரெட்டியிடம்  செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் இருந்து ஏன் உடனடியாக படைகளை வாபஸ் பெற வேண்டும். காஷ்மீரில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து கொண்டிருந்தது. இதன் காரணமாகவே, சர்வதேச சமூகத்தை அந்த நாடு நாடியது.  காஷ்மீரில் இருந்து படைகளை திரும்ப பெறுவதும் பெறாததும் உள்ளூர் நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர ஏனைய இடங்களில் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது” என்றார். 

Next Story