ஒடிசாவில் கர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்


ஒடிசாவில் கர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்
x
தினத்தந்தி 22 Aug 2019 1:57 AM GMT (Updated: 22 Aug 2019 1:57 AM GMT)

ஒடிசாவில் கர்ப்பிணியை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.

ஒடிசாவில் காளஹண்டி நகரில் நெஹலா கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.  ஆனால் அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்கு முறையான சாலை வசதிகள் எதுவும் இல்லை.

அவர்கள் ஆம்புலன்ஸ் வசதியை பெற வேண்டுமெனில் தங்களது கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கனிகுமா கிராம் நகரை வந்தடைய வேண்டும்.

இதனால் அவரது உறவினர்கள், கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்தபடி தோளில் சுமந்து கொண்டு 12 கி.மீட்டர் தொலைவை கடந்து கனிகுமா கிராம் நகரை அடைந்தனர்.  வழியில் குறுக்கிட்ட ஜெலிங்கதோரா ஆற்றையும் கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்தபடியே கடந்து சென்றனர்.

Next Story