பஞ்சாப்: வெள்ளத்தால் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் சேதம்


பஞ்சாப்: வெள்ளத்தால் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 22 Aug 2019 12:33 PM GMT (Updated: 22 Aug 2019 12:33 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

சண்டிகார்,

பஞ்சாப்பில் பெய்த கனமழையால், அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்பின. பக்ரா அணையில்  இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால், சட்லெஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்,   தாழ்வான பகுதிகள் மற்றும் ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

இந்த சூழலில், பஞ்சாப்பில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததாக பஞ்சாப் விவசாய துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதுபோக 13 மாவட்டங்களில் 561 கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.  வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.1000 கோடி சிறப்பு தொகுப்பு நிதியாக அளிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 

Next Story