தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்தஒரு தொடர்பு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம் + "||" + BJP has no role in arrest of former Union Finance Minister P Chidambaram Nirmala Sitharaman

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்தஒரு தொடர்பு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்தஒரு தொடர்பு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்தஒரு தொடர்பு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்  சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சிபிஐயை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே, ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்துவதாக மத்திய அரசு மீதும், பா.ஜனதா மீதும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் சுமத்தினர்.  

இதை ஏற்கனவே பா.ஜனதா மறுத்திருந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் மறுத்து உள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன்,  ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டு எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த கட்சி இந்த நாட்டை பல ஆண்டுகள் ஆண்டிருக்கிறது. அப்போது காங்கிரஸ் வேண்டுமானால் சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் பா.ஜனதா அப்படி செய்யாது. ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
 
நீதித்துறை மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ஒரு தேசிய கட்சியான காங்கிரசிடம் இருந்து இப்படியான குற்றச்சாட்டு வந்திருக்கக்கூடாது. அவர்கள் எவ்வளவு விரக்தியில் உள்ளார்கள்? என்பதையே இது காட்டுகிறது. ஒரு வழக்கில் தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சரியான வழியை காட்டவில்லை. அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி
டிரம்ப் வருகை குறித்த காங்கிரசின் விமர்சனத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
2. காங்கிரசில் என்ன தான் நடக்கிறது...? ராகுல்காந்தி தலைவராவாரா...? மாட்டாரா...?
காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை காங்கிரசுக்குள் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
3. இஸ்லாமியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு இஸ்லாமியராக தெரிந்தாலும் எங்களுக்கு இந்தியர்களே- பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் குடிமக்களை மதத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள். அனைவரையும் நாங்கள் இந்தியர்களாகவே பார்க்கிறோம் என பிரதமர் கூறினார்.
4. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்த்த குடும்பத்தினர்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்க்க அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
5. 'பூமி திருத்தி உண்’- பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார்