1984-ல் ராஜீவ் காந்தி பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார், ஆனால் அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை - சோனியா காந்தி


1984-ல் ராஜீவ் காந்தி பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார், ஆனால் அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை - சோனியா காந்தி
x
தினத்தந்தி 22 Aug 2019 4:03 PM GMT (Updated: 22 Aug 2019 4:03 PM GMT)

1984-ல் ராஜீவ் காந்தி முழு பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார், ஆனால் அச்சத்தை பரப்ப அவர் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.


ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றினார் சோனியா காந்தி. புதுடெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி  நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி அல்லது பாரதீய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தை நேரடியாக குறிப்பிடாமல் விமர்சனம் செய்த சோனியா காந்தி, 1984 தேர்தலில் பெரும்பான்மையை பெற்று ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார், ஆனால் அவர் ஒருபோதும் அச்சமான சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது மக்களின் சுதந்திரத்தை அழிக்கவோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் கொள்கைகளை ஆபத்தில் வைக்க அவர் ஒருபோதும் தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.  மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் மற்றும் இந்தியாவின் கொள்கையை மாற்ற விரும்புவோருக்கு எதிராக கட்சி  தொடர்ந்து போராடும் எனவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

 இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதன் மூலம் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்ற செய்தியை ராஜீவ் காந்தி வழங்கினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது செய்ததை யாராலும் செய்ய முடியாது எனவும் சோனியா காந்தி கூறினார். 
 

Next Story