தேசிய செய்திகள்

திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயண விளம்பரங்கள் : பா.ஜனதா விமர்சனம் + "||" + Haj, Jerusalem Ads On Tirupati Bus Tickets, BJP Hits Out At Jagan Reddy

திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயண விளம்பரங்கள் : பா.ஜனதா விமர்சனம்

திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயண விளம்பரங்கள் : பா.ஜனதா விமர்சனம்
திருப்பதி பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம், ஹஜ் பயணங்களுக்கான விளம்பரங்கள் இடம் பெற்ற விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அரசை பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.
திருப்பதியிலிருந்து கோவில் நகரமான திருமலைக்கு செல்லும் பயணிகளுக்கு ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் வழங்கிய டிக்கெட்டுகளில் இந்து அல்லாத யாத்திரை பற்றிய விளம்பரங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  

 டிக்கெட்டுகளின் பின்புறத்தில் ஹஜ் மற்றும் ஜெருசலேமுக்கான யாத்திரை பற்றிய அரசு விளம்பரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விளம்பரங்களை கவனித்த பயணிகள் அதை பிராந்திய மேலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்துக்கள் அல்லாதோர் செல்லும் யாத்திரை பற்றி அச்சிடப்பட்ட டிக்கெட் மூட்டைகள் தவறுதலாக  திருப்பதிக்கு வந்துள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  போக்குவரத்து அமைப்பின் நிர்வாக இயக்குநர் இவ்விவகாரம் தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். 

"இது சிறுபான்மையினர் துறையால் வெளியிடப்பட்ட  விளம்பரம்" என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்து அல்லாதவர் என்றும், அவருக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என விமர்சித்துள்ள பா.ஜனதா தலைவர்கள், சிறுபான்மை மதங்களுக்கான தன்னுடைய கொள்கையை திணிக்க முயற்சி செய்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய பா.ஜனதா எம்.எல்.ஏ ராஜா சிங் ஏற்கனவே இந்த பிரச்சினையை எழுப்பும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை என்று திருப்பூரில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
3. கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி ஏற்பு ‘கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன்’ என பேச்சு
கர்நாடக மாநில பா.ஜனதா புதிய தலைவராக பதவி ஏற்ற நளின்குமார் கட்டீல், கட்சியை பலப்படுத்த தீவிரமாக பாடுபடுவேன் என்று கூறினார்.
4. இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் - அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ.
இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் என அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
5. கர்நாடக மாநில பா.ஜனதாவின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் நியமனம்
கர்நாடக மாநிலத்தின் பா.ஜனதா கட்சியின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.