ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்
x
தினத்தந்தி 23 Aug 2019 10:40 PM GMT (Updated: 23 Aug 2019 10:50 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம் தொடர்பாக, 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு பெற ஒப்புதல் அளித்ததில் பணம் கைமாறியதாக கூறப்படும் வழக்கில் மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பான சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாக கூறப்பட்டு உள்ளது. அந்த வகையில் வெளிநாட்டில் உள்ள சில நிறுவனங்களுக்கு பணம் கைமாறி இருப்பதாகவும், வெளிநாடுகளில் வங்கி கணக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான முழு விவரங்களை அறிய கோர்ட்டு மூலமாக இங்கிலாந்து, சிங்கப்பூர், மொரீசியஸ், பெர்முடா, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளின் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story