தேசிய செய்திகள்

காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை + "||" + J-K: CRPF officer shoots himself dead in Kashmir

காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீரில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீநகர்,

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.அரவிந்த் (வயது 33). காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்.-ல் துணை தளபதியாக பணியாற்றி வருகிறார்.  இவர் 2014 ஆம் ஆண்டு சி.ஆர்.பி.எப்.-ல் படை வீரராக பணியில் சேர்ந்தார். 

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 14 ஆம் தேதி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார். இவரது மனைவி கடந்த 20 ஆம் தேதியன்று காஷ்மீர் வந்துள்ளார். அதன் பிறகு இன்று காலை அரவிந்த் தனது சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அரவிந்த் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
திருச்சி பாலக்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
2. தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தாய் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. செம்பனார்கோவில் அருகே, பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
செம்பனார்கோவில் அருகே பேக்கரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சோழசிராமணி அருகே, விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
சோழசிராமணி அருகே விஷமாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5. பெங்களூருவில் ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை
பெங்களூருவில் ஐ.எப்.எஸ். அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.