தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் + "||" + Congress Interim President Sonia Gandhi's statement on former Union Finance Minister Arun Jaitley's demise.

அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல்

அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல்
அருண் ஜெட்லி மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இதன் காரணமாக, கடந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும்,  அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”அருண் ஜெட்லியின் பொதுச்சேவை எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக்கில் இந்திய பகுதியில் சீன ராணுவம் எப்போது ஊடுருவியது? சோனியா காந்தி கேள்வி
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார்
2. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
4. டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் அமித்ஷாவை உடனடியாக நீக்க வேண்டும்- சோனியா காந்தி
டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக நீக்க வேண்டும் ஜனாதிபதியிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
5. சோனியா காந்தி தலைமையில் காங்.காரிய கமிட்டி கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.