ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு


ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 12:07 PM GMT (Updated: 24 Aug 2019 12:07 PM GMT)

மும்பையில் ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ரேணு மண்டல். இவர் தினமும் வயிற்றுப்பிழைப்புக்காக இந்தி பட பாடல்களை ரெயில்வே நடைபாதையில் பாடி வந்தார். 

இந்நிலையில் அதுபோன்று பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான ஏக் பியார் கா நக்மாஅ ஹேய் என்ற பாடலை ரெயில்வே நடைமேடையில் ராகமாக பாடிக்கொண்டிருந்தார். அதனை ரசித்து கொண்டிருந்த சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

ரேணுவின் குரலில் கவரப்பட்ட பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷம்மையா தனது அடுத்த படமான ஹேப்பி ஹர்டி அண்ட் ஹீர்  படத்தில் ரேணுவுக்கு வாய்ப்பளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  

ரேணுவை பார்த்த மாத்திரத்திலேயே அவரது குரலில் ஒரு தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொண்டேன். திறமை எங்கிருந்தாலும் அதனை கண்டுபிடித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்ற அறிவுரையை தாம் கடைபிடித்து வருவதாகவும், ரேணுவின் குரலை அனைவரும் கேட்க செய்வதே தனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

Next Story