தேசிய செய்திகள்

சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார் - அமித்ஷா + "||" + Modi has fulfilled Sardar Patel’s dream: Amit Shah

சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார் - அமித்ஷா

சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார் - அமித்ஷா
சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றி உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, “ சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நாடாளுமன்றம் அங்கீகரித்துவிட்டது.


சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்திய நாட்டை நாட்டின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்தார். ஜம்மு-காஷ்மீர் அதில் விடுபட்டு விட்டது. தற்போது அந்தக் குறை நீங்கி உள்ளது. இந்தியா நாடு பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், சைபர் கிரைம் மற்றும் அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள சவால்கள் போன்ற உள்நாட்டு பாதுகாப்புக்கு நாடு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆகவே இந்தப் பிரச்னைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக முடியாது.

இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் மோடியின் பார்வையை அடைய அமைதியும், பாதுகாப்பும் அவசியம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார். ” என்று கூறினார்.

மேலும் உள்நாட்டு பாதுகாப்பைப் பேணுவதில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும், வலுவான உள் பாதுகாப்பு இல்லாவிட்டால் இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசிய மோடி
அமெரிக்க கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் பேசினார்.
2. ஹவுடி-மோடி நிகழ்ச்சி: உலக அரசியலை நிர்ணயிக்கும் நபராக டிரம்ப் விளங்குகிறார் - மோடி பேச்சு
ஹவுடி-மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
3. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.
4. ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார் - டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
பஹ்ரைன் பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸ் சென்றார். அங்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
5. பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி சந்திப்பு
பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டனர்.