வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்


வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Aug 2019 6:18 PM GMT (Updated: 24 Aug 2019 6:18 PM GMT)

வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் என பிரதமர் மோடியை அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

அருண் ஜெட்லியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். மேலும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜெட்லியின் மறைவு குறித்து அறிந்த பிரதமர் மோடி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டாம் என பிரதமர் மோடியிடம் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story