பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: கேரளாவிலும் உஷார் - கடலோரப்பகுதிகள் தீவிர கண்காணிப்பு


பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: கேரளாவிலும் உஷார் - கடலோரப்பகுதிகள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 7:15 PM GMT (Updated: 24 Aug 2019 7:04 PM GMT)

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, கேரளாவிலும் கடலோரப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கொச்சி,

இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள், தமிழகத்துக்குள் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அண்டை மாநிலமான கேரளாவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் இந்திய கடற்படை உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை கொச்சியில் பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், கேரளா முழுவதும் மிகுந்த உஷார் நிலையில் இருக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளார்.

Next Story